சினிமா செய்திகள்

காணாமல் போன நடிகை மர்ம மரணம் சேற்றில் உடல் கிடந்தது + "||" + Adea Shabani: Body of aspiring actor found in shallow grave in northern California

காணாமல் போன நடிகை மர்ம மரணம் சேற்றில் உடல் கிடந்தது

காணாமல் போன நடிகை மர்ம மரணம் சேற்றில் உடல் கிடந்தது
காணாமல் போன பிரபல நடிகை ஆதிய ஷபாணி மர்ம மரணம். சேற்றில் உடல் கிடந்தது. #AdeaShabani
கலிபோர்னியா

கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஆதிய ஷபாணியின் உடல்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

நடிகை கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போயிருந்த நிலையில், இவரை தேடி அமெரிக்க  போலீசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் இவரின் உடல்  நேற்று  மாசிடோனியா பிரதேசத்தின் சேற்று நிலமொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆதிய ஷபாணி (வயது 25) கடந்த சில தினங்களுக்கு முன் இவர் காணாமல் போனதை தொடர்ந்து அவரின் காதலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த பிப்ரவரி 23ம் தேதி தானும் தனது காதலியும் கார் ஒன்றில் கலிபோர்னியாவில் அமைந்துள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பாதியிலேயே இறக்கி விட்டுச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அந்த  பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையில் சடலம் இவ்வாறு சேற்றில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பிரேத பரிசோதனையில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது. இவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.