சினிமா செய்திகள்

ஹாலிவுட் இயக்குனருடன் கமல்ஹாசன் சந்திப்பு + "||" + Kamal Hassan meets with Hollywood director

ஹாலிவுட் இயக்குனருடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஹாலிவுட் இயக்குனருடன் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனை சந்தித்து பேசினார்.
சென்னை, 

‘இன்செப்ஷன்’, ‘டார்க் நைட்’ போன்ற பிரபலமான ஹாலிவுட் படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருந்தார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை சென்ற நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் இரவு ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

அதில், “மதிப்புக்குரிய கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ‘டன்கிர்க்’ படத்தை டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதற்கு பதிலாக ‘ஹே ராம்’ படத்தின் டிஜிட்டல் நகலை அவருக்கு பார்ப்பதற்காக கொடுத்துள்ளேன். அவர் (கிறிஸ்டோபர் நோலன்) பாபநாசம் படத்தை பார்த்ததை அறிந்து, நான் ஆச்சரியம் அடைந்தேன்” என்று கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பிற்காக சொந்த மக்களை வெளி மாநிலத்துக்கு அனுப்பி அரசு வேடிக்கை பார்க்கிறது கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
வேலை வாய்ப்பிற்காக சொந்த மக்களை வெளி மாநிலத்துக்கு அனுப்பி அரசு வேடிக்கை பார்க்கிறது என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டி பேசினார்.
2. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நீதி மய்ய கூட்டங்களில் பேசுகிறார்.
3. பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் - கமல்ஹாசன்
பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் - கமல்ஹாசன்
4. தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் ராசிபுரத்தில் கமல்ஹாசன் பேச்சு
தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
5. படித்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க கூடாது கமல்ஹாசன் பேச்சு
படித்தவர்கள் அரசியல் எதற்கு? என ஒதுங்கி விடக்கூடாது என்று நாமக்கல்லில் கமல்ஹாசன் கூறினார்.