சினிமா செய்திகள்

மாரடைப்பால் சினிமா ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் மரணம் + "||" + Cinematographer Suresh Kumar death

மாரடைப்பால் சினிமா ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் மரணம்

மாரடைப்பால் சினிமா ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் மரணம்
சினிமா ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மல்ஹாசன் தயாரித்து, சத்யராஜ் கதாநாயகனாக நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு,’ சிவாஜிகணேசனின் சொந்த படமான ‘என் தமிழ் என் மக்கள்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், சுரேஷ்குமார். இவர், திரையுலகை சேர்ந்த பிரபல புகைப்பட நிபுணர் ஆனா ரூனாவின் மகன். ‘ஊமை விழிகள்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரமேஷ்குமாரின் அண்ணன் ஆவார். சுரேஷ்குமார் சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்தார்.

அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தங்கையை பார்த்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சுரேஷ்குமார் கீழே விழுந்தார். இரவு நேரம் என்பதால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அவருடைய பொருட்களை யாரோ திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றபோது, உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். மரணம் அடைந்த சுரேஷ்குமாருக்கு வயது 60. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடைய உடல் தகனம் சென்னையில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.