சினிமா செய்திகள்

‘டுவிட்டரில்’ சாதனைநடிகர் மோகன்லாலை பின்தொடரும் 50 லட்சம் பேர் + "||" + 50 lakh people following Mohanlal in Twitter

‘டுவிட்டரில்’ சாதனைநடிகர் மோகன்லாலை பின்தொடரும் 50 லட்சம் பேர்

‘டுவிட்டரில்’ சாதனைநடிகர் மோகன்லாலை பின்தொடரும் 50 லட்சம் பேர்
டுவிட்டரில் மோகன்லாலை பின்தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லாலுக்கு தமிழ், தெலுங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள், தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நல்ல வசூல் பார்க்கின்றன. மோகன்லால் சமூக வலைத்தளமான டுவிட்டர், பேஸ்புக்கிலும் தீவிரமாக புளங்குகிறார். சமூக விஷயங்கள் மற்றும் தனது படங்கள் பற்றிய தகவல்களை இவற்றில் பதிவிட்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலக நடிகர்-நடிகைகள் பலரும் டுவிட்டர், பேஸ்புக்கில் இருக்கிறார்கள். இந்த நிலையில் டுவிட்டரில் மோகன்லாலை பின்தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. தென்னிந்திய நடிகர்களில் டுவிட்டரில் அதிகமானோரால் பின்தொடரப்படும் நடிகர் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.

இவருக்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். அவரை டுவிட்டரில் 40.6 லட்சம்பேர் பின்தொடர்கிறார்கள். கமல்ஹாசனை 40.5 லட்சம்பேர் பின்தொடர்கின்றனர். மலையாள பட உலகில் மோகன்லாலுக்கு அடுத்த இடத்தில் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர்சல்மான் இருக்கிறார். அவரை 15 லட்சம்பேர் பின்தொடர்கிறார்கள். டுவிட்டரில் தன்னை 50 லட்சம்பேர் பின்தொடர்வதை பார்த்து மோகன்லால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ‘அன்புக்கும் நட்புக்கும், நன்றி’ என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.