சினிமா செய்திகள்

மீண்டும் திகில் படத்தில், நயன்தாரா! பேய் பிடித்த பெண்ணாக நடிக்கிறார் + "||" + the horror film, Nayantara

மீண்டும் திகில் படத்தில், நயன்தாரா! பேய் பிடித்த பெண்ணாக நடிக்கிறார்

மீண்டும் திகில் படத்தில், நயன்தாரா!
பேய் பிடித்த பெண்ணாக நடிக்கிறார்
நயன்தாரா மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
நயன்தாரா ஏற்கனவே ‘சந்திரமுகி,’ ‘மாயா,’ ‘டோரா’ ஆகிய திகில் படங்களில் நடித்து இருக்கிறார். இதில், ‘சந்திரமுகி’யும், ‘மாயா’வும் ‘சூப்பர் ஹிட்’ படங்களாக அமைந்தன. 2 படங்களும் தயாரிப்பாளர்களுக்கு வசூலை வாரி கொடுத்தன. ‘டோரா’ எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாத படமாக அமைந்தது.

நயன்தாராவுக்கும், திகில் படங்களுக்கும் ஒரு ராசி இருப்பதாக டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கருதுகிறார்கள். எனவே அவரை தேடி நிறைய திகில் பட வாய்ப்புகள் வருகின்றன. வரிசையாக திகில் படங்களில் நடித்தால், “பேய் பட கதாநாயகி” அல்லது “திகில் பட ராணி” என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்று நயன்தாரா பயப்படுகிறார். எனவேதான் அவர் வேறு வேறு கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

2 வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அது, ‘பரி’ என்ற இந்தி படத்தின் தழுவல். சமீபத்தில் திரைக்கு வந்த அந்த படம், வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.10 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘பரி,’ இதுவரை ரூ.45 கோடி வசூல் செய்து இருக்கிறது. அதில், பேய் பிடித்த பெண்ணாக அனுஷ்கா சர்மா நடித்து இருக்கிறார். பிரோசித்ராய் டைரக்டு செய்திருந்தார்.

குழந்தைகளை நரபலி கொடுக்கும் ஒரு கொடூர கூட்டத்தை ஒரு பேய் பழிவாங்குவது போன்ற கதை இது. இதில் அனுஷ்கா சர்மா நடித்த வேடத்தில், பேய் பிடித்த பெண்ணாக நயன்தாரா நடிக்கிறார். பிரபல டைரக்டர் ஒருவர் இயக்குகிறார். மிகப்பெரிய ஒரு பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு ஒரு பெரிய சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா!!
பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் தோற்றுப்போனதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2. நயன்தாராவுக்கு ஆலோசனை!
நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை சொல்கிறார்களாம்.
3. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
4. நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்
நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.
5. 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 புதிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒன்று.