சினிமா செய்திகள்

லிசா ஹைடனின் தாய்மைத் தருணங்கள்.. + "||" + Moments of motherhood of Lisa Haiten ..

லிசா ஹைடனின் தாய்மைத் தருணங்கள்..

லிசா ஹைடனின் தாய்மைத் தருணங்கள்..
பிரபல மாடலும், நடிகையுமான லிசா ஹைடன் சென்னையில் பிறந்தவர்.
பிரபல மாடலும், நடிகையுமான லிசா ஹைடன் சென்னையில் பிறந்தவர். அவரிடம் சில ஜாலியான கேள்விகள்:

உங்களிடம் இருக்கும் பழக்கவழக்கங்களில் நீங்கள் எதை மாற்றிக்கொள்ள விரும்புவீர்கள்?

நான் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். அதைதான் மாற்றிக்கொள்ள விரும்புவேன். வாய்ப்பு கிடைக்கும்போது மிக அமைதியாக இருக்க விரும்புகிறேன்.


உங்கள் பூர்வீகம் கேரளா. அதற்கான எந்த அடையாளம் உங்களிடம் இருக்கிறது?

எனது அடர்ந்த கூந்தல் முக்கிய அடையாளம். தேங்காய் சேர்த்த சமையலை நான் விரும்பி சாப்பிடுவேன்.

உங்களைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியாத 3 விஷயங்கள்?

நான் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மேக்கப் போடுவதில்லை. உணவில் கொஞ்சம் அதிகம் உப்பு சேர்த்துக்கொள்வேன். அழகு நிலையத்துக்குச் செல்வதில்லை.

நீங்கள் குழந்தைக்கு தாயாகியிருக்கிறீர்கள். தாய்மையை பற்றி நீங்கள் சொல்ல விரும்பும் புதியதொரு விஷயம்?

யாராலும், எந்தப் புத்தகத்தாலும் தாய்மைக்கு நம்மைத் தயார்ப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதம், நம் உடம்பையும் மனதையும் தாய்மைக்குத் தயார்ப்படுத்திவிடும். நாம் கருவுறும்போது வேறுவிதமான மனநிலையில் இருப்போம். ஆனால் பிரசவத்தின்போது முற்றிலும் வேறுவிதமான பெண்ணாகிவிடுவோம்.

உங்கள் வாழ்வின் உயர்வான தருணங்கள்?

எனது திருமணம், என் மகனைப் பெற்றது... அப்புறம், திரையுலக, மாடலிங் பயணம்.

நீங்கள் உங்கள் உடம்பு குறித்து எதுவும் கூச்சப்பட்டதுண்டா?

ஆமாம். இன்று ஒரு பெண்ணைப் பார்த்து, ‘நீங்கள் ரொம்ப ஒல்லியாக இருக்கிறீர்கள்’ என்றால் அது பாராட்டு. ஆனால் ஒல்லியாக இருந்ததற்காக சிறுவயதில் நிறைய சீண்டப்பட்டவள் நான். அது, ரொம்ப குண்டாக இருப்பதற்குச் சமமாக சங்கடமானது. எனது பள்ளித் தோழிகள் என் ஒல்லியான உருவம் குறித்து கிண்டலடித்துக்கொண்டே இருப்பார்கள்.

உங்களுக்குப் பிடித்த உணவு?

பாஸ்தா.

பிடித்த சுற்றுலாத் தலம்?

மெக்சிகோ.

பிடித்த சூப்பர் மாடல்?

சிண்டி கிராபோர்டு.

நீங்கள் மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் கஷ்டப்பட்ட விஷயம்?

பதற்றம்தான். இப்போதும் பல மாடல் களுக்கு அந்தப் பிரச்சினை இருப்பதைக் காண்கிறேன்.

உங்களைப் பொறுத்தவரை கவர்ச்சியான விஷயம்?

நான் ஒரு சுதந்திரப் பறவை. என் வாழ்க்கையில் எதையுமே நான் திட்டமிடுவதில்லை. அதுதான் என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம். அதைதான் என்னிடம் இருக்கும் கவர்ச்சியான விஷயமாக கருதுகிறேன்.

உங்கள் வாழ்வில் நடந்த, சினிமா மாதிரியான சம்பவம்?

எனது திருமணம். நான் எனது கணவரைச் சந்தித்ததும், எங்கள் திருமணம் நடந்ததும் ஒரு ரொமான்டிக் படத்துக்குப் பொருத்தமான கதை.