சினிமா செய்திகள்

பட அதிபர் சங்கம் நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கையா? + "||" + President of the Association of Image Acting on Vijay Sethupathi

பட அதிபர் சங்கம் நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கையா?

பட அதிபர் சங்கம் நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கையா?
‘பீட்சா’ படம் மூலம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. கடந்த வருடம் கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன் படங்களில் நடித்து இருந்தார்.
தற்போது 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, இடம்பொருள் ஏவல், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

‘ஜூங்கா’ படத்தை கோகுல் டைரக்டு செய்கிறார். கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு போர்ச்சுக்கல்லில் நடந்து வருகிறது. பட அதிபர்கள் சங்கத்தின் தடையை மீறி ஜூங்கா படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டதாக திடீர் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.


டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒரு மாதமாக புதிய படங்களை திரைக்கு கொண்டு வரவில்லை. சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதித்து உள்ளனர்.

இந்த தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “வேலை நிறுத்த அறிவிப்புக்கு முன்பே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டோம். படப்பிடிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தி விட்டோம். விசா உள்ளிட்ட வேலைகளும் முடிந்து விட்டன.” என்றனர்.

படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும்
ஈழத்தமிழர்கள் படு கொலைக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும் என நடிகர் குண்டு கல்யாணம் கூறினார்.
2. கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை சென்ற நடிகர் விஷால்
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நடிகர் விஷால் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
3. விவேக் ஓபராய் ஆசையை நிறைவேற்றும் பிருத்விராஜ்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர், விவேக் ஓபராய். இவர் நடிகராக எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு சமூக சேவகராகவும் இந்திய அளவில் பிரபலமானவர்.
4. நடிகர் எஸ்.வி.சேகர் 12-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் நெல்லை கோர்ட்டு உத்தரவு
அவதூறு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் வருகிற 12-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.