சினிமா செய்திகள்

உடல் எடையை குறைக்கும் அஞ்சலி + "||" + Actress anjali to reducing body weight

உடல் எடையை குறைக்கும் அஞ்சலி

உடல் எடையை குறைக்கும் அஞ்சலி
‘அங்காடி தெரு’ படத்தில் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, பலூன் என்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் அவருக்கு படங்கள் உள்ளன. தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் நடித்து முடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி ஜோடியாக காளி படத்திலும், சசிகுமாருடன் நாடோடிகள்-2 படத்திலும் நடிக்கிறார். குண்டூர் டாக்கீஸ் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கவும் அவர் பரிசீலனையில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


அஞ்சலி உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் கிளம்பின. அவரை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைக்கும்படி வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து அஞ்சலி ‘ஜிம்’மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார்
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
2. திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
3. வாஜ்பாயின் அஸ்தி தமிழக தலைவர்களிடம் ஒப்படைப்பு; கமலாலயத்தில் 2 நாள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
தமிழக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் 2 நாள் வைக்கப்படும்.
4. திருவாரூரில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி
திருவாருரில் உள்ள கருணாநிதி இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
5. அனுமந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி
குரங்கு அங்குள்ள மின்கம்பியில் ஏறி விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் அந்த குரங்கு உடல் கருகி பரிதாபமாக செத்தது.