சினிமா செய்திகள்

தெலுங்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை கடிதம் சிக்கியது + "||" + Telugu news anchor Radhika Reddy allegedly kills herself by jumping off building

தெலுங்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை கடிதம் சிக்கியது

தெலுங்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை கடிதம் சிக்கியது
தெலுங்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா ரெட்டி, தனது வீட்டின் ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
ஐதராபாத்

தெலுங்கானா ஐதராபாத்தின் முசாபெட் நகரைச் சேர்ந்தவர் ராதிகா ரெட்டி(36), இவர் தெலுங்கு டிவி  ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக  பணிபுரிந்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விவாகரத்து செய்த ராதிகா ரெட்டி, அதன் பின்னர் மனநலம் குன்றிய தனது 14  வயது மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டின் ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதிகா ரெட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ராதிகா ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . ராதிகா ரெட்டியின் கைப்பையை பரிசோதித்த போது அதில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, பயங்கரமான தலை மற்றும் எலும்புமுறிவுகளுக்கு ஆளாகியிருந்தேன்.

எனது மூளையே எனக்கு முதல் எதிரியாக இருந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக ராதிகா ரெட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.