சினிமா செய்திகள்

குடிபோதையில் நடிகையின் தலைமுடியைப்பிடித்து இழுத்து தாக்கிய நடிகர் + "||" + Drunk Bhojpuri star Pawan Singh beats up Akshara Singh By Sanyukta Baijal Sunday | 1st April, 2018

குடிபோதையில் நடிகையின் தலைமுடியைப்பிடித்து இழுத்து தாக்கிய நடிகர்

குடிபோதையில் நடிகையின் தலைமுடியைப்பிடித்து இழுத்து தாக்கிய நடிகர்
பிரபல நடிகர் பவன் சிங் குடிபோதையில் நடிகை அக்ஷரா சிங்கின் தலைமுடியைப்பிடித்து இழுத்து அவரை பலமாக தாக்கியுள்ளார்.


போஜ்பூரி சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் பவன் சிங். இவர் அக்ஷரா சிங் என்ற நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் பவண் சிங், நடிகை அக்ஷரா சிங்கை ஓட்டலில் வைத்து குடிபோதையில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவரும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக சில்வாசா பகுதிக்கு சென்றுள்ளனர். பிறகு தமன் கங்கா வேலி ரிசார்ட்டில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அங்கு கடந்த வியாழக்கிழமை இரவு பவன் சிங் குடித்துவிட்டு ரூமை விட்டு வெளியேறியுள்ளார். போதையில் வெளியே செல்ல வேண்டாம் என தடுத்த அக்ஷரா சிங்கின் முடியை பிடித்து இழுத்து அவரின் தலையை சுவற்றில் இடித்துள்ளார். தடுக்க வந்த ரிசார்ட் பணியாளர்களுடனும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார் பவன் சிங். 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் அதைப் பற்றி தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...