சினிமா செய்திகள்

சுருதிஹாசனை டுவிட்டரில் பின் தொடரும் 70 லட்சம் பேர் + "||" + Up to 70 lakhs will be followed in Srudhi Hassan

சுருதிஹாசனை டுவிட்டரில் பின் தொடரும் 70 லட்சம் பேர்

சுருதிஹாசனை டுவிட்டரில் பின் தொடரும் 70 லட்சம் பேர்
சுருதிஹாசனை டுவிட்டரில் பின் தொடரும் 70 லட்சம் பேர், தென்னிந்திய நடிகைகளில் முதல் இடம் பிடித்தார்.

நடிகை சுருதிஹாசன் டுவிட்டர் தளத்தில் அதிகமாக புழங்கி வருகிறார். சினிமா விஷயங்களை அடிக்கடி பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். ரசிகர்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். இதனால் டுவிட்டரில் சுருதிஹாசனை பின்தொடர்வோர் அதிகமாகி வந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 70 லட்சமாக உயர்ந்துள்ளது.


இந்த சாதனையை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் டுவிட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கையில் தென்னிந்திய நடிகைகளில் சுருதிஹாசன் முதல் இடத்தை பெற்று உள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு டுவிட்டரில் அவர் நன்றி தெரிவித்து உள்ளார். நடிகை சமந்தா டுவிட்டரில் 6.50 லட்சம் பின் தொடர்வோரை கொண்டு இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை முறையே 45 லட்சத்தை தாண்டி உள்ளது. டுவிட்டரில் சுருதிஹாசனை நடிகர் தனுஷ் முந்தியிருக்கிறார். அவரை 70 லட்சத்து 25 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். சுருதிஹாசன் 2009-ல் ‘லக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 7-ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார்.

கடந்த வருடம் அவரது நடிப்பில் சி-3 படம் வெளியானது. தற்போது 2 இந்தி படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேலை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார்.