சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகையை கொன்று புதைத்த காதலன்? + "||" + Boyfriend killing Hollywood actress

ஹாலிவுட் நடிகையை கொன்று புதைத்த காதலன்?

ஹாலிவுட் நடிகையை கொன்று புதைத்த காதலன்?
ஹாலிவுட் நடிகையை அவரது காதலனே கொன்று புதைத்த சம்பவம் நடந்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகை அதியா ஷபானி. மாசிடோனியாவை சேர்ந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடு எடுத்து தங்கி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அதியா ஷபானி கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று மாயமானார். பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.


இதைத்தொடர்ந்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அவரை தேடி வந்தார்கள். இந்த நிலையில் அதியா தங்கி இருந்த வீட்டில் இருந்து 645 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் அரைகுறையாக மூடப்பட்ட குழியில் அவர் பிணமாக கிடந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவரது தலையில் படுகாயம் இருந்தது.

அதியா உடம்பில் பச்சை குத்தி இருந்ததை வைத்தே அடையாளம் கண்டனர். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதியாவை அவரது காதலர் கிறிஸ்டோபர் ஸ்பாட்ஸ் கொலை செய்து புதைத்து இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரித்தனர். இருவரும் காரில் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் அதியாவை கீழே இறக்கிவிட்டு சென்றுவிட்டேன் என்று கிறிஸ்டோபர் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய கிறிஸ்டோபர் திடீரென்று தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...