சினிமா செய்திகள்

விரும்பாத திசையில் பயணித்து வெறுப்புக்கு ஆளானேன் - நடிகை சன்னிலியோன் + "||" + I disliked the direction in which I did not like - Actress Sunny leone

விரும்பாத திசையில் பயணித்து வெறுப்புக்கு ஆளானேன் - நடிகை சன்னிலியோன்

விரும்பாத திசையில் பயணித்து வெறுப்புக்கு ஆளானேன் - நடிகை சன்னிலியோன்
விரும்பாத திசையில் பயணித்து வெறுப்புக்கு ஆளானேன் என்று நடிகை சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.
ஆபாச பட நடிகை சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் இருக்கிறது. அவருக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சக கவர்ச்சி நடிகைகள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்தி படங்களில் அரைகுறை ஆடையில் நடிப்பதை எதிர்த்து சமூக சேவை அமைப்புகள் போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிப்பதும் தொடர்கிறது.

புத்தாண்டு தினத்தில் பெங்களூரு நகருக்கு அழைத்து வந்து நடனம் ஆட வைப்பதற்கு நடந்த ஏற்பாடுகளும் எதிர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டன. தற்போது தமிழில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் கதா நாயகியாக நடிக்கிறார். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். வாடகைத் தாய் மூலமும் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

சன்னிலியோன் அளித்த பேட்டி வருமாறு:-

“எனது பெற்றோர்கள் விரும்பாத திசையில் பயணித்து விட்டேன். இதனால் மக்கள் வெறுப்புக்கு ஆளானேன். நான் இந்தியா வரும்போதுதான் இங்குள்ள மக்கள் என்னை விமர்சிக்கவும் எதிர்க்கவும் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். 21 வயதில் இருந்தே மக்கள் வெறுப்பை நான் சம்பாதித்து வருகிறேன்.

நிறைய இமெயில்களும் கண்டனங்களும் வருகின்றன. மற்ற குடும்பங்களைப்போல் எனது குடும்பத்திலும் பிரச்சினைகள் உள்ளன. எல்லாம் ஒரு காரணத்துக்காக நடந்து இருப்பதாக கருதுகிறேன். எப்படி இருந்தாலும் எனது வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கு நேர்ந்த வெறுப்புகளும் எதிர்ப்புகளும் என் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்று விரும்புகிறேன்.” என சன்னிலியோன் கூறினார்.