சினிமா செய்திகள்

கணவருடன் ரஷியாவில் குடியேறுகிறார் ஸ்ரேயா + "||" + Shreya migrates with her husband in Russia

கணவருடன் ரஷியாவில் குடியேறுகிறார் ஸ்ரேயா

கணவருடன் ரஷியாவில் குடியேறுகிறார் ஸ்ரேயா
கணவருடன் ரஷியாவில் குடியேறுகிறார் ஸ்ரேயா, சினிமாவை விட்டு விலக உள்ளார்.

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் அறிமுகமானார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமானார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், தோரணை, குட்டி, ரவுத்திரம் ஆகியவை ஸ்ரேயாவின் முக்கிய படங்கள். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.


தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயாவுக்கு வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை.

திருமணம் ஆனதால் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். ஏற்கனவே வெங்கடேஷ் ஜோடியாக புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். திருமணத்தை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து ஸ்ரேயாவை நீக்கி விட்டு வேறு கதாநாயகி தேடுகிறார்கள்.

இதனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ரஷியாவுக்கு குடிபெயற தயாராகி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. பனிச்சரிவில் போராடி ஏறும் குட்டிக்கரடி! வைரலாகும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை!
ரஷியாவில் பனிச்சரிவில் குட்டிக்கரடியொன்று தாயிடம் சேர மலையில் பனிச்சரிவில் போராடி ஏறும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை வெளியாகியுள்ளது.
2. ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
3. ஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானிடம் இருந்து எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
4. உலகைச்சுற்றி
சீன எல்லையையொட்டி, ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.
5. “சீனா, ரஷியாவில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் போன்றது பிரதமர் மோடியின் பேட்டி” சிவசேனா விமர்சனம்
பிரதமர் மோடியின் இ-மெயில் பேட்டி சீனா மற்றும் ரஷியாவில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் போன்றது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. #PMModi #ShivSena