சினிமா செய்திகள்

நயன்தாரா பட இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் + "||" + Actress Srireddy complained to Nayanthara film director

நயன்தாரா பட இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்

நயன்தாரா பட இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்
நயன்தாரா பட இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் கடந்த வருடம் தமிழ் பட உலகை உலுக்கிய சுசிலீக்ஸ் போன்று தெலுங்கு பட உலகை புதிதாக கிளம்பி உள்ள ஸ்ரீலீக்ஸ் ஆட்டிப்படைக்கிறது. தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி உள்ளார்.

முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் ஸ்ரீலீக்ஸில் வெளியானது. தொடர்ந்து பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலுவும் ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ளார். இவர் நயன்தாரா நடித்து தமிழில் வெளியான ‘நீ எங்கே என் அன்பே” என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்தவர். சாய்பல்லவி நடித்த ‘பிடா’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி உள்ளார்.

சேகர் கம்முலு மீது மறைமுகமாக குற்றம் சாட்டி பேஸ்புக்கில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:-

“அந்த இயக்குனர் பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர். அவருக்கு இரக்கம் இல்லை. ‘கொம்முலு வச்சின சேகருடு என்பதில் இருந்து அவரது பெயரை கண்டுபிடிக்கலாம். வீடியோ அழைப்பிலும் வருவார். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதில் வல்லவர். இளம் நடிகர்களிடம் பணம் வாங்கி நடிக்க வாய்ப்பு அளிக்கிறார்” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். டைரக்டர் சேகர் கம்முலுவைத்தான் நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார் என்று தெலுங்கு பட உலகினர் பேசினார்கள்.

இந்த குற்றச்சாட்டை டைரக்டர் சேகர் கம்முலு தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்து கூறியிருப்பதாவது:-

“பெண்களுக்கு சம உரிமை மற்றும் அவர்கள் மேம்பாட்டுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் என்னை அறிந்தவர்களுக்கும் இது தெரியும். என்னை குற்றம் சாட்டியவர்களை சும்மா விடுவதாக இல்லை. என்னை பற்றி பதிவிட்ட கருத்தை நீக்கி விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.” என சேகர் கம்முலு கூறியுள்ளார்.  இவர்கள் மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வல்லம் பேரூராட்சி பகுதியில் கலங்கலாக வரும் குடிநீர் பொதுமக்கள் புகார்
வல்லம் பேரூராட்சி பகுதியில் குடிநீர் கலங்கலாக வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
2. நடுவானில் பயணிகள் பாதிப்பு: விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
நடுவானில் பயணிகள் பாதிக்கப்பட்டதற்கு காரணமான ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் போலீசில் புகார் மனு அளித்தார்.
3. தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம்: கைதானவர் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் படம் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் பா.ஜனதா கட்சியினர் புகார்
தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கைதானவரின் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜனதா கட்சியினர் போலீசில் புகார் செய்தனர்.
4. பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு இழப்பீடு: மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை
பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு, சப்–இன்ஸ்பெக்டர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
5. மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை
மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.