சினிமா செய்திகள்

படப்பிடிப்புகள் முடங்கியதால் தீவிர உடற்பயிற்சிக்கு மாறிய நடிகர்-நடிகைகள் + "||" + Actors and actresses who have turned into serious exercise due to the silence of the shoots

படப்பிடிப்புகள் முடங்கியதால் தீவிர உடற்பயிற்சிக்கு மாறிய நடிகர்-நடிகைகள்

படப்பிடிப்புகள் முடங்கியதால் தீவிர உடற்பயிற்சிக்கு மாறிய நடிகர்-நடிகைகள்
படப்பிடிப்புகள் முடங்கியதால் தீவிர உடற்பயிற்சியில் நடிகர்-நடிகைகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் முன்னணி நடிகர்-நடிகைகள் இந்த வேலை நிறுத்தம் குறித்து கவலைப்படாமல் கிடைத்த விடுமுறையை அனுபவிக்க வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டனர். சில வளரும் நடிகர்-நடிகைகள் இந்த விடுமுறையிலேயே தங்களது உடலை கட்டுக்கோப்புக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.


தினமும் ஜிம்முக்கு சென்று பல மணிநேரம் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். அப்படி ஜிம்மில் தீவிரமாக ‘வொர்க் அவுட்’ செய்யும் படங்களையும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிந்து வருகிறார்கள். முதலில் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்காக எடை குறைப்பில் ஈடுபட்டுள்ள சிம்பு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அதர்வா, ஜி.வி.பிரகாஷ் என்று வரிசையாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த விஷயத்தில் நடிகர்களுக்கு போட்டியாக கதாநாயகிகளும், தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் படங்களை பகிர்கிறார்கள். திரிஷா, அமலாபால், தமன்னா, பூஜா ஹெக்டே, ரகுல்பிரீத் சிங், கத்ரீனா கைப், அமைரா தஸ்தூர் எனப் பலரின் இன்ஸ்டாகிராமிலும் டுவிட்டரிலும் உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.