சினிமா செய்திகள்

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi in the role of the transgender

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி
‘‘சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, ‘ஷில்பா’ என்ற திருநங்கை வேடத்தில் நடித்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி தற்போது, ‘ஜுங்கா,’ ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். ‘ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்புக்காக அவர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றார். ‘‘அங்கே படப்பிடிப்பு நடத்த ஏற்கனவே அனுமதி பெற்று விட்டதால், பட அதிபர்களின் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடியவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கிறேன்’’ என்று விஜய் சேதுபதி விளக்கம் சொன்னார்.

அவர் நடிக்கும் இன்னொரு படம், ‘சூப்பர் டீலக்ஸ்.’ இந்த படத்தில், அவர் திருநங்கையாக நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட அந்த வேடம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக, டைரக்டர் தியாகராஜ குமாரராஜா தெரிவித்தார். இவர், ‘ஆரண்ய காண்டம்’ படத்தை டைரக்டு செய்தவர். இவர் கூறியதாவது:-

‘‘சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, ‘ஷில்பா’ என்ற திருநங்கை வேடத்தில் நடித்து இருக்கிறார். டைரக்டர் மிஷ்கின், கிறிஸ்தவ பாதிரியாராக நடித்துள்ளார். சமந்தா, ரம்யாகிருஷ்ணன், பகத் பாசில் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் உள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக் கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.’’