சினிமா செய்திகள்

முழு அடைப்பு காரணமாக தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து + "||" + Cancel 2 view in theaters due to complete shutters

முழு அடைப்பு காரணமாக தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து

முழு அடைப்பு காரணமாக தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து
முழு அடைப்பு காரணமாக தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ரெயில் மறியல், பஸ் மறியல்களில் அணி அணியாக ஈடுபட்டு அரசியல் கட்சியினரும் இளைஞர்கள், மாணவர்களும் கைதாகி வருகிறார்கள்.


நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தபட்டது. வணிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கடைகளை மூடினார்கள். அரசியல் கட்சியினர் மறியல் நடத்தினார்கள். பஸ்கள் குறைவாகவே ஓடின. இதனால் தியேட்டர்களுக்கு கூட்டம் வரவில்லை.

சென்னையில் உள்ள பல திரையரங்குகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்தன.

மாலை, இரவு காட்சிகள் வழக்கம்போல் நடந்தன. “தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் பந்த் காரணமாகவும் பார்வையாளர்கள் வராத காரணத்தாலும் தியேட்டர்களில் காலை, பகல் ஆகிய 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன” என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தியேட்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - அதிகாரிகள் நடவடிக்கை
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தியேட்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
2. முழு அடைப்புக்கு ஆதரவாக மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் ஓடவில்லை
திண்டுக்கல் மாவட்டத்தில், முழு அடைப்புக்கு ஆதரவாக 80 சதவீத லாரிகள் ஓடவில்லை. இருப்பினும், பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.
3. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின.
4. இன்று முழு அடைப்பு போராட்டம் : அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மும்பையில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்கிறது.
5. முழுஅடைப்பின் போது வன்முறையில் ஈடுபட்ட 185 பேர் கைது
மராத்தா சமுதாயத்தினர் நடத்திய முழு அடைப்பின் போது புனேயில் வன்முறையில் ஈடுபட்ட 185 பேர் கைது செய்யப்பட்டனர்.