சினிமா செய்திகள்

அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி கோரிக்கை நிராகரிப்பு + "||" + Half-naked protests Actress srireddy request rejection

அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி கோரிக்கை நிராகரிப்பு

அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி கோரிக்கை நிராகரிப்பு
பட வாய்ப்பு தருவதற்காக நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாக புகார் எழுப்பி, தெலுங்கு பட உலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

ஐதராபாத்,

பாலியல் தொல்லைக்கு  தானும்  ஆளானதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

அதே நேரத்தில் தன்னை நடிகர் சங்கம் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளாதது பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக ஐதராபாத்தில் நேற்று முன்தினம் திரைப்பட வர்த்தக சபை முன் அவர் ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு, அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார்.

பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக அவர் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று, நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க முடியாது என தெலுங்கு நடிகர் சங்கத்தின் நிர்வாகி சிவாஜிராஜா, ஐதராபாத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

அவரது நடத்தை காரணமாக அவரை நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக சேர்க்க முடியாது என அவர் கூறினார்.

மேலும் தெலுங்கு நடிகைகள் பலருக்கும் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளதாகவும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. உங்கள் ரகசியங்களை வெளியிடுவேன் : நடிகர் ராஜேந்திர பிரசாத்தை மிரட்டிய ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி பட உலகினர் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார். தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக பட்டியலை வெளியிட்டார்.
2. இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி பட உலகில் அதிர்வை ஏற்படுத்தினார்.
3. தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது ஸ்ரீரெட்டி மோசடி புகார்
தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
4. அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை : நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
5. நடிகை ஸ்ரீரெட்டி மீது அவதூறு வழக்கு தொடருவேன்’’ - டைரக்டர் வாராகி பேட்டி
நடிகை ஸ்ரீரெட்டி மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று டைரக்டர் வாராகி பேட்டி அளித்துள்ளார்.