சினிமா செய்திகள்

இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு: ஸ்ரீ ரெட்டி + "||" + Tollywood Actress Sri Reddy Claims She Didn’t Get Work Even After Sending Her Nude Pics To Filmmakers

இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு: ஸ்ரீ ரெட்டி

இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு: ஸ்ரீ ரெட்டி
இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks
ஐதராபாத்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானபடுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில், பேட்டி அளித்த ஸ்ரீ ரெட்டி கூறியதாவது:-

செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டூடியோக்கள் தான் பாதுகாப்பான இடங்கள். பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஸ்டூடியோக்களை பிராத்தல்கள் போன்று பயன்படுத்துகிறார்கள்.

ஸ்டூடியோக்கள் சிவப்பு விளக்கு பகுதி போன்று உள்ளன. ஸ்டூடியோக்களுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அது பாதுகாப்பான இடம். மேலும் போலீசாரும் சோதனை செய்ய மாட்டார்கள். அரசும் இதை கண்டுகொள்ளாது.

வட நாட்டில் இருந்து வரும் நடிகைகள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதால் தெலுங்கு பேசும் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஏன் என்றால் தெலுங்கு பேசும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்வது இல்லை. என்ன காரணத்திற்காக எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தடை விதிக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஒரு பெண்ணாக எனது கருத்தை சுதந்திரமாக கூற உரிமை இருக்கிறது. தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். யாருக்கும் நான் பயப்படமாட்டேன்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன், என்னிடம் ஆதாரம் உள்ளது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.


தொடர்புடைய செய்திகள்

1. மனைவி சமந்தாவை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்த கணவர் நாக சைதன்யா
கணவர் நாக சைதன்யா எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2. சில்க் தற்கொலை இல்லை! சீரழித்து நடு தெருவில் விட்ட அரசியல்வாதிகள்! திடுக்கிடும் தகவல்
சில்க் தற்கொலை இல்லை! சீரழித்து நடு தெருவில் விட்ட அரசியல்வாதிகள்! அவரை வைத்து முதல் படம் இயக்கிய இயக்குனர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.
3. 16 வயதில் பாலியல் பலாத்காரம் ஏன் அமைதியாக இருந்தேன் - பத்மா லட்சுமி
தான் 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஏன் அமைதியாக இருந்தேன் என்று அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பத்மா லட்சுமி விளக்கம் அளித்து உள்ளார்.
4. தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன் - டி.ராஜேந்தர் சொல்கிறார்
தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக இந்தியில் படம் எடுக்க முடிவு செய்துள்ளதாக டி.ராஜேந்தர் கூறியிள்ளார்.
5. விபத்தில் சிக்கிய பிரபல பாடகர்! சம்பவ இடத்திலேயே குழந்தை பலி
விபத்தில் சிக்கிய பிரபல பாடகர்! சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாப பலியாகி உள்ளது.