சினிமா செய்திகள்

படுக்கைக்கு அழைப்பதாக இன்னொரு நடிகை புகார் + "||" + Actress complains about being invited to bed

படுக்கைக்கு அழைப்பதாக இன்னொரு நடிகை புகார்

படுக்கைக்கு அழைப்பதாக இன்னொரு நடிகை புகார்
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக இந்தி நடிகை திவ்யா தத்தா கூறியுள்ளார்.
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் இளம் நடிகைகளிடமும் ஏற்கனவே பிரபலமாக உள்ள நடிகைகள் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும்போதும் அவர்களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ராதிகா ஆப்தே உள்ளிட்ட நடிகைகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி நடிகைகள் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

ஆனால் படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர்களை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக இந்தி நடிகை திவ்யா தத்தாவும் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

“திரையுலகில் படுக்கைக்கு அழைப்பவர்கள் பற்றி ஒவ்வொரு நடிகையும் பேச தொடங்கி உள்ளனர். ஆனால் அந்த கேவலமான மனிதர்கள் யார் என்பதை சொல்ல மறுக்கிறார்கள். சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. படுக்கைக்கு அழைப்பவர்கள் பெயர்களை வெளியிட்டால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் ஒழித்துக்கட்டி விடுவார்கள் என்று நடிகைகள் பயப்படுவதால்தான் பெயர் களை வெளியிட தயங்குகிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணுமே பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டு இருப்பார்கள். கைமாறு எதிர்பார்த்து உதவுகிறவர்களை நான் நெருங்க விடுவது இல்லை. இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன்.”

இவ்வாறு நடிகை திவ்யா தத்தா கூறினார்.