சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் + "||" + Caught in Controversy actress shraddha srinath

சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்

சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சினிமா துறையை பற்றி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, நிவின் பாலி ஜோடியாக ரிச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னட மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

தற்போது மிலன் டாக்கீஸ் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களுக்கும் இந்தி படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், “இந்தி திரையுலகில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்றார்.

இது தென்னிந்திய பட உலகினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய பட உலகில் ஒழுக்கம் இல்லையா? என்று கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் அவரை கண்டித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். தென்னிந்திய மொழி படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

தவறாக பேசி வம்பில் மாட்டிக்கொண்டோமே என்று ஸ்ரத்தா ஸ்ரீநாத் அதிர்ச்சியில் இருப்பதாக நெருக்கமானவர்கள் கூறினார்கள்.