சினிமா செய்திகள்

திருப்பதி கோவிலில் காஜல் அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள் + "||" + Fans surrounded Kajal Agarwal in Tirupati temple

திருப்பதி கோவிலில் காஜல் அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள்

திருப்பதி கோவிலில் காஜல் அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள்
திருப்பதி கோவிலுக்கு சென்ற காஜல் அகர்வாலை ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இரு மொழிகளிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது இந்தியில் நல்ல வசூல் பார்த்த குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் திடீரென்று திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். காஜல் அகர்வாலை பார்த்ததும் கூட்டத்தினர் சூழ்ந்தனர். செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக காஜல் அகர்வாலை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு சிறப்பு தரிசனத்துக்கு கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். காஜல் அகர்வால் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, “மன ஆறுதலுக்காக குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன்” என்றார்.