சினிமா செய்திகள்

மறைந்த பிரபல நடிகைகல்பனா மகள் கதாநாயகி ஆனார் + "||" + Kalpana's daughter became heroine

மறைந்த பிரபல நடிகைகல்பனா மகள் கதாநாயகி ஆனார்

மறைந்த பிரபல நடிகைகல்பனா மகள் கதாநாயகி ஆனார்
மறைந்த பிரபல நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
கடந்த 2016-ல் மரணம் அடைந்த பிரபல நடிகை கல்பனா தமிழில் பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கார்த்தி, நாகார்ஜுனாவுடன் தோழா படத்தில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி ஆவார்.

தற்போது கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா மலையாளத்தில் தயாராகும் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இதில் இர்ஷாத், கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகிறது. சுமேஷ் லால் இயக்குகிறார். கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி ஆகிய மூவரைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து ஸ்ரீசங்க்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார்.