சினிமா செய்திகள்

ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம் + "||" + Ranvir Singh, Anushka Sharma Confusion in the awards

ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்

ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்
ரன்வீர் சிங்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் வழங்கப்பட இருக்கும் விருதுகளில் குழப்பம் ஏற்பட்டது.
ரன்வீர் சிங்கும், அனுஷ்கா சர்மாவும் இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். ரன்வீர் சிங் சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்து இருந்தார். இவருக்கும் தீபிகா படுகோனேவுக்கும் காதல் என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் பேச்சு உள்ளது.

அனுஷ்கா சர்மா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தாதா சாகிப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த விருது திரைப்படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருது என்பதால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் இருவரையும் வாழ்த்தி கருத்துகளும் பதிவிட்டனர். பின்னர் இது மத்திய அரசின் விருது அல்ல என்றும், தனியார் அமைப்பு ஒன்று தாதா சாகிப் பால்கே பெயரில் இருவருக்கும் இந்த விருதுகளை வழங்குவதாக அறிவித்து இருப்பதும் தெரியவந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஹல்லி பாய்
சோயா அக்தரின் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘ஹல்லி பாய்.’

ஆசிரியரின் தேர்வுகள்...