சினிமா செய்திகள்

இயக்குனரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த எழுத்தாளர் - ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு + "||" + Sri Reddy now targets Kona Venkat after accusing Suresh Babu's son Abhiram and others of sexual harassment

இயக்குனரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த எழுத்தாளர் - ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு

இயக்குனரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த எழுத்தாளர் - ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு
இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி எழுத்தாளர் கோனா வெங்கட் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்

பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஒருவரின் லீலையை வெளியிடப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார். பெண்களை ஓட விட்டு துரத்திப் பிடித்து உறவு கொண்டால் தான் அவருக்கு திருப்தி ஏற்படும் என்றார் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் அந்த எழுத்தாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார் அவர்.

பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன், கெஸ்ட் ஹவுஸுக்கு வா என்று பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் அழைத்தார். ஆனால் அங்கு சென்றபோது விநாயக் இல்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

கெஸ்ட் ஹவுஸுக்கு சென்ற பிறகு கோனா வெங்கட் கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். வரும் நாட்களில் மேலும் இரண்டு பெரிய பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

அந்த 2 பிரபலங்களின் பெயர்களை தற்போதே வெளியிட்டால் மக்கள் குழம்பி விடுவார்கள். அதனால் ஒவ்வொருத்தரின் பெயராக வெளியிடுகிறேன் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டியின் புகாரை கேட்டு கோனா வெங்கட் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி
பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறி உள்ளார். #sriReddy
2. லாரன்ஸ் சவால், அவர் போல் ஸ்டைல் காட்டி வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி
சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், லாரன்சுக்காக அவர் போல் ஸ்டைல் காட்டி புதிய வீடியோ ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். #SriReddy #RaghavaLawrence
3. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி
திரைப்படத்துறையினர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் குறித்து விளக்குகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. #SriReddy
4. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் -டி.ராஜேந்தர்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார்.
5. எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள்- நடிகை ஸ்ரீ ரெட்டி மிரட்டல்
தெலுங்கை தொடர்ந்து தமிழ் திரையுலகினர் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, மேலும் சிலரது பெயர்களை வெளியிடப்போவதாக கூறி உள்ளார்.