சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில்! குருவியார் + "||" + Cinema question answer! Kuruviyar

சினிமா கேள்வி பதில்! குருவியார்

சினிமா கேள்வி பதில்!  குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
விஜய் நடிக்கும் 62–வது படத்தின் கதை என்ன? அந்த படத்தில் விஜய் என்ன வேடத்தில் நடிக்கிறார்? (டி.ராஜன், கோச்சடை)

விஜய் நடித்து வரும் அவருடைய 62–வது படம், அரசியல் சார்ந்த கதை. அதில், ஒரு அரசியல்வாதியை எதிர்த்து போராடும் நாயகனாக விஜய் வருகிறார்!


***

திரிஷா காலையில் எழுந்ததும் என்ன செய்கிறார்? யோகா செய்கிறாரா, உடற்பயிற்சி செய்கிறாரா? (எம்.பாக்யராஜ், துவரங்குறிச்சி)

திரிஷா காலையில் எழுந்ததும் வீட்டை சுற்றி ஓடுகிறார். அவருடைய உடற்பயிற்சிகளில், இதுவும் ஒன்று!

***

குருவியாரே, நடிகர் ஜெய்க்கு அவருடைய காதலி என கூறப்படும் நடிகை அஞ்சலி பிறந்த நாள் வாழ்த்து கூறினாராமே... இவர்கள் இடையே முறிந்து போன காதல், மீண்டும் துளிர்த்து விட்டதா? (ஜே.ஸ்டீபன் ஜெயராஜ், தூத்துக்குடி)

காதலர்கள் இடையே ஊடலும், கூடலும் சகஜம்தானே..?

***

தமிழ் பட கதாநாயகர்களில், ‘குத்து சண்டை வீரர்’ வேடம் யாருக்கு கச்சிதமாக பொருந்தும்? (எம்.அரவிந்தராஜ், டி.கல்லுப்பட்டி)

ஜெயம் ரவிக்கு கச்சிதமாக பொருந்தும். அவர் குத்து சண்டை வீரராக நடித்த ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,’ ‘பூலோகம்’ ஆகிய 2 படங்களும் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை செய்தன!

***

குருவியாரே, திரையிசை வரலாற்றில், இளையராஜா ஆயிரம் படத்துக்கு மேல் இசையமைத்துள்ளது போல் இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளராவது இந்த சாதனையை செய்திருக்கிறார்களா? (ரா.சரவணன், பெரம்பலூர்)

இந்தியாவில் மட்டுமல்ல... உலக அளவில் கூட வேறு எந்த திரையிசையமைப்பாளரும் ஆயிரம் படத்துக்கு மேல் இசையமைத்ததில்லை!

***

குருவியாரே, ஸ்ரேயாவின் காதல் கணவர் பெயர் என்ன? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்ன தொழில் செய்கிறார்? (ஏ.சாமிநாதன், திண்டுக்கல்)

ஸ்ரேயாவின் காதல் கணவர் பெயர், ஆண்ட்ரு கோப்பசேவ். ரஷியாவை சேர்ந்த அவர், ஒரு தொழில் அதிபர்!

***

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாவதாக தகவல் வெளியானதே? (ஆர்.ஆனந்த், வேலூர்)

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக எடுக்க 2 தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனை வைத்து சாண்டோ சின்னப்ப தேவர் படம் எடுத்து இருக்கிறாரா? (எம்.கண்ணன், புதுச்சேரி)

சிவாஜிகணேசனை வைத்து சின்னப்ப தேவர் படம் எடுக்கவில்லை.

***

குருவியாரே, நயன்தாரா இப்போது ஒரு படத்துக்கு எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்? (பி.செல்வசிங், கோவை)

ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா, இப்போது தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டாராம்!

***

குருவியாரே, எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி கடைசியாக ஜோடி சேர்ந்து நடித்த படம் எது? (கே.சந்தோஷ், தாம்பரம்)

‘அரச கட்டளை!”

***

‘களவாணி,’ ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் நடித்த விமல் இப்போது எந்த படத்தில் நடித்து வருகிறார்? (வி.சுதர்சன், தர்மபுரி)

விமல் இப்போது, ‘கன்னி ராசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, கமல்ஹாசன் அரசியல் கட்சி தலைவர் ஆகிவிட்டதால், இனிமேல் அவர் சினிமாவில் நடிப்பாரா? (எச்.அன்வர் பாட்சா, தேனி)

சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா, மாட்டாரா? என்பது பற்றி கமல்ஹாசனிடம் இருந்து விரைவில் அறிவிப்பு வெளிவரும்!

***

தனக்கு கணவராக வருபவருக்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் கூறியிருக்கிறாரே...? அவருக்கு சமைக்க தெரியாதா? (மா.கா.செந்தூர் பாண்டி, மதுரை)

கங்கனா ரணாவத்துக்கு சமைக்க தெரியாதாம். சமைத்துப்போட்டால் நன்றாக சாப்பிட தெரியுமாம்!

***

தமனாவுக்கு எது அழகு? அவருடைய உதடா, மூக்கா, கண்களா...எது அழகு? (கே.சம்சுதீன், ஈரோடு)

தமனாவுக்கு அவருடைய தங்க நிறமே அழகு! உதடு, மூக்கு, கண்கள் எல்லாம் அப்புறம்...!

***

குருவியாரே, ‘திருப்பாச்சி’ படத்தில், “கும்பிட போன தெய்வம்...குறுக்கே வந்ததம்மா...” பாடலுக்கு விஜய்யுடன் ஆடிய சாயாசிங் திருமணம் ஆனவரா, ஆகாதவரா? (எஸ்.விமல், கொண்டலாம்பட்டி)

சாயாசிங், காதல் திருமணம் செய்து கொண்டவர். அவருடைய கணவரின் பெயர், கிருஷ்ணா. இவர், ‘சின்னத்திரை’ நடிகர்!

***

குருவியாரே, “ராசாத்தி ஒன்ன பாக்காத நெஞ்சு காற்றாடி போலானதே...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடல் காட்சியில் நடித்தவர் யார், படத்தை இயக்கியவர் யார்? (இரா.சின்ன தம்பி, உடுமலைப்பேட்டை)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘வைதேகி காத்திருந்தாள்.’ பாடல் காட்சியில் நடித்தவர், விஜயகாந்த். படத்தை இயக்கியவர், ஆர்.சுந்தர்ராஜன்!

***

‘சுப்பிரமணியபுரம்’ புகழ் சசிகுமார் இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? அடுத்து அவர் நடித்து வெளிவரும் படம் எது? (ப.வேல்முருகன், மயிலாடுதுறை)

சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன், போராளி, சுந்தரபாண்டியன், குட்டி புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா, கொடிவீரன் ஆகிய 12 படங்களில் நடித்து இருக்கிறார். அடுத்து அவர் நடித்து, ‘நாடோடிகள்-2’ படம் வெளிவர இருக்கிறது!

***

பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் ஆகிய மூன்று பேரில், எம்.ஜி.ஆருடன் அதிக படங் களில் நடித்த வில்லன் யார்? (எம்.ஜெயக்குமார், பர்கூர்)

எம்.என்.நம்பியார்! பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர் ஆகிய இருவரும் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு அதிக படங்களில் வில்லனாக நடித்தவர், எம்.என்.நம்பியார்!

***