சினிமா செய்திகள்

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை நிவேதா பெத்துராஜ் + "||" + Sexual harassment Actress Nivedha Pethuraj

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை நிவேதா பெத்துராஜ்

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை நிவேதா பெத்துராஜ்
உதயநிதி ஜோடியாக ‘பொதுவாக என் மனசு தங்கம்’, தினேசுடன் ‘ஒருநாள் கூத்து படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ்.
தயநிதி ஜோடியாக ‘பொதுவாக என் மனசு தங்கம்’, தினேசுடன் ‘ஒருநாள் கூத்து படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம்ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படங்களில் நடித்து வருகிறார்.

நிவேதா பெத்துராஜ் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர்-நடிகைகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

நடிகை நிவேதா பெத்துராஜும் சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டித்து பேசி சமூக வலைத்தளத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “குழந்தைகள் எதிராக பாலியல் தொந்தரவுகள் அதிகம் நடக்கின்றன. பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களால்தான் இந்த கொடுமைகள் நேர்கின்றன. நானும் சிறிய வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சொல்லி கொடுக்க வேண்டும். போலீசாரை மட்டும் நம்பி இருக்க கூடாது. பாலியல் குற்றங்களை தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.