சினிமா செய்திகள்

‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தேரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார் + "||" + Radhika Apte in 'Second World War II'

‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தேரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்

‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தேரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்
‘வேல்ட் வார்-2’ (இரண்டாம் உலகப்போர்-2) என்ற பெயரில் புதிய ஹாலிவுட் படம் தயாராகிறது.
‘வேல்ட் வார்-2’ (இரண்டாம் உலகப்போர்-2) என்ற பெயரில் புதிய ஹாலிவுட் படம் தயாராகிறது. ஏற்கனவே இரண்டாம் உலகப்போர் பற்றி நிறைய படங்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் இருந்து வித்தியாசமாக ‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது ரகசிய உளவாளியாக செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நூர் இனயத் கான் தந்தை இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தான் பரம்பரையை சேர்ந்தவர். தாய் பிரானி அமினா பேகம் அமெரிக்காவை சேர்ந்தவர்.

லண்டனில் வசித்து வந்த நூர் இனயத், இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாக வேலை பார்த்தார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது அங்கு வானொலியில் வேலை பார்த்து ரகசியங்களை சேகரித்தார். பின்னர் ஹிட்லர் படையினர் அவர் உளவாளி என்பதை கண்டறிந்து கைது செய்து 1944-ல் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனயத்துக்கு வயது 30.

இவரது கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஹாலிவுட் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்தவர். ஹாலிவுட் பட வாய்ப்புக்காகவே அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...