சினிமா செய்திகள்

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்க எதிர்ப்பு + "||" + Resistance to National Award for Sridevi

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்க எதிர்ப்பு

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்க எதிர்ப்பு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியை ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளனர்.
றைந்த நடிகை ஸ்ரீதேவியை ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை பழிவாங்கும் தாய் கதாபாத்திரத்தில அவர் நடித்து இருந்தார். ஸ்ரீதேவிக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

மறைந்த நடிகைக்கு தேசிய விருது வழங்குவது ஏற்புடையது அல்ல. அவரை விட சிறந்த நடிகைகள் இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். ஸ்ரீதேவிக்கு விருது வழங்குவதற்கு தேசிய விருதுகள் தேர்வு கமிட்டி தலைவர் சேகர் கபூரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான். ஆனால் மாம் படத்துக்காக அவருக்கு விருது வழங்கியதை ஏற்கமுடியாது என்று பேச்சு கிளம்பி இருக்கிறது. ஸ்ரீதேவி இறந்து விட்டதால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறார்கள் என்றும் விமர்சிக்கின்றனர். எனக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனாலும் ஸ்ரீதேவிக்கு விருது வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தேர்வு குழுவினரிடம் சுட்டி காட்டி வந்தேன். ஸ்ரீதேவியை தேர்வு செய்வது மற்ற நடிகைகளுக்கு செய்யும் துரோகம் என்று கூறினேன். ஆனாலும் அவரை தேர்வு செய்து விட்டனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.