சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை; வடிவேல் நடிக்க தடையா? + "||" + Producers Association Consulting; Vadivel to stop acting?

தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை; வடிவேல் நடிக்க தடையா?

தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை; வடிவேல் நடிக்க தடையா?
வடிவேல் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க வடிவேல் மறுத்ததால் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இம்சை அரசன் படத்தில் நடித்துக் கொடுக்கும்படி நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரிடம் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் வடிவேல் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு தேதி ஒதுக்கி நடித்து வருவதால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு இழப்பீடு: மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை
பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு, சப்–இன்ஸ்பெக்டர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
2. பிரான்ஸ் நாட்டில் இருந்து போர் விமானம் வாங்குவதை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ரபேல் போர் விமானம் வாங்குவதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
3. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிய கடை உரிமையாளர் கைது
திண்டுக்கல்லில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிய கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
4. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உணவகம் நடத்துவோர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உணவகம் நடத்துவோர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கிற்கு தடை - பேஸ்புக் நிர்வாகம் அதிரடி
மியான்மர் நாட்டின் ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கை, தடை செய்து பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #Myanmar #Facebook