சினிமா செய்திகள்

பாலியல் வன்மங்களுக்கு எதிர்ப்பு: ரசிகர்களை கவர்ந்த சன்னிலியோன் புகைப்படம் + "||" + Resistance to Sexual Harassment: Sunilion photography that attracted fans

பாலியல் வன்மங்களுக்கு எதிர்ப்பு: ரசிகர்களை கவர்ந்த சன்னிலியோன் புகைப்படம்

பாலியல் வன்மங்களுக்கு எதிர்ப்பு: ரசிகர்களை கவர்ந்த சன்னிலியோன் புகைப்படம்
பாலியல் வன்மங்களுக்கு எதிராக ரசிகர்களை கவர்ந்த சன்னிலியோனின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
சிறுமிகள் மீது நடந்து வரும் பாலியல் வன்மங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில் நடிகை சன்னிலியோன் தனது வளர்ப்பு மகளை அரவணைத்து பாதுகாப்பாக வைத்து இருப்பது போன்று வித்தியாசமான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.


அதில், “உன்னை இந்த உலகில் உள்ள தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். உன்னை பாதுகாப்பதற்காக என் உயிரை தருவதற்கும் தயாராக இருக்கிறேன். பெற்றோர்களே என்ன விலை கொடுத்தேனும் குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்று கருத்து பதிவிட்டு உள்ளார். இதற்காக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சன்னிலியோனை பாராட்டி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. எதிர்ப்பை மீறி வாய்ப்புகள் : விஷால் படத்தில் சன்னி லியோன்
ஆபாச பட நடிகையான சன்னிலியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு எதிராக மற்ற இந்தி நடிகைகள் திரண்டு புதிய படங்களில் வாய்ப்பு கிடைப்பதை தடுத்து வருகின்றனர்.
2. நடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்தி : பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு
நடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்கியில் அவரது வீட்டு முன்பு பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு மகள் குறித்து சன்னி லியோன்
தன்னுடைய மகள் சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு என சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.
4. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்
இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. ரஷ்யாவில் ஒரு குடைதான் உள்ளதா? - புடினை கேலி செய்த ரசிகர்கள்
ரஷ்யாவில் ஒரு குடைதான் உள்ளதா? என ரஷ்ய அதிபர் புடினை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். #VladimirPutin