சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் சமந்தா + "||" + Samantha in the new look

புதிய தோற்றத்தில் சமந்தா

புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா புதிய தோற்றத்திற்கு மாறினார்.

சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். கணவர் வீட்டிலும் அவரது சினிமா பயணத்தை ஊக்குவிக்கிறார்களாம். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்த சமந்தாவின் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிகிறது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது:-


“ரங்கஸ்தலம் படத்தில் நான் நடித்திருந்த ராமலட்சுமி கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியே போகும்போது அந்த பெயரை சொல்லித்தான் ரசிகர்கள் என்னை அழைக்கிறார்கள். எனது கதாபாத்திரத்தை இயக்குனர் அற்புதமாக வடிவமைத்து இருந்தார். ராமலட்சுமியாகவே நான் மாறிவிட்டேன்.

அந்த படத்தில் நடித்தது சவாலாகவும் இருந்தது. மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. செல்போன், இணையதள வசதிகள் எதுவும் இல்லாமல் அங்கு முகாமிட்டு நடித்தோம். மிகவும் சிரமப்பட்டோம். அந்த கஷ்டத்துக்கு பலன் கிடைத்த மாதிரி படம் வெற்றி பெற்று இருக்கிறது. எனது மாமனார் நாகார்ஜுனா, 100 சதவீதம் உழைப்பை கொடுத்து பிரமாதமாக நடித்து இருக்கிறாய் என்று என்னை பாராட்டினார். இவ்வாறு சமந்தா கூறினார்.

தலைமுடி அளவை குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சமந்தாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘யு டர்ன்’ படம் சமந்தா நடிக்க தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அந்த படத்துக்காக தலைமுடியை குறைத்து புதிய கெட்டப்புக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...