‘மரகதக்காடு’ படத்துக்கு தணிக்கை குழுவினர் பாராட்டு


‘மரகதக்காடு’ படத்துக்கு தணிக்கை குழுவினர் பாராட்டு
x
தினத்தந்தி 19 April 2018 10:30 PM GMT (Updated: 18 April 2018 7:56 AM GMT)

“காடுகள் அழியக்கூடாது. அவைகளை பாதுகாப்போம்’’ என்ற கருத்தை அடிப்படையாக வைத்து தயாராகியுள்ள படம், ‘மரகதக்காடு.’

‘மரகதக்காடு’  படத்தில், புதுமுகங்கள் அஜய், ராஞ்சனா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். பாபநாசம், முண்டன்துறை, களக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில், 65 நாட்கள் படம் வளர்ந்து இருக்கிறது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக் களையும், ஒளிப்பதிவையும் பாராட்டியதுடன், அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்துக்கு ஜெயப்பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மங்களேஸ்வரன் டைரக்ஷ னில், ரகுநாதன் தயாரித்துள்ளார். இவர், பட்டாம்பூச்சி, வரப்பிரசாதம், அஸ்திவாரம், தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர். இவருடைய 19-வது தயாரிப்பாக, ‘மரகதக்காடு’ படம் வெளிவர இருக்கிறது. 

Next Story