சினிமா செய்திகள்

கண்ணடித்து புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர் கண்ணடித்து மீண்டும் ரகளை + "||" + Priya Varrier becomes a national crush once again with yet another wink

கண்ணடித்து புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர் கண்ணடித்து மீண்டும் ரகளை

கண்ணடித்து புகழ் பெற்ற  நடிகை பிரியா  வாரியர்  கண்ணடித்து மீண்டும் ரகளை
நடிகை பிரியா வாரியர் நடித்துள்ள சாக்லெட் விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #PriyaVarrier

'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடலில், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார். 

இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். 

இந்த நிலையில் தற்போது பிரியா வாரியர் நடித்துள்ள, சாக்லெட் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளம்பரத்தில் கண்ணைச் சிமிட்டியபடி சாக்லேட்டை சுவைப்பதுடன், Deewar படத்தில் அமிதாப் பேசும் புகழ் பெற்ற வசனத்தையும் பேசி உள்ளார். இதனால், இந்த "ஒரு அடார் லவ்" கண்சிமிட்டல் காட்சியைப் போலவே, சாக்லெட் விளம்பரமும் தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் காதலனை பார்த்து இடது கண்ணடித்து காதல் சிக்னல் தந்த பிரியா, தற்போது வலது கண்ணடித்து சிக்னல் தந்திருக்கிறார்.