சினிமா செய்திகள்

விரைவில் திருமணம் மலையாளத்தில் கவனம் செலுத்தும் நயன்தாரா + "||" + Soon get married Nayantara who focuses on Malayala films

விரைவில் திருமணம் மலையாளத்தில் கவனம் செலுத்தும் நயன்தாரா

விரைவில் திருமணம் மலையாளத்தில் கவனம் செலுத்தும் நயன்தாரா
விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் மலையாளத்தில் கவனம் செலுத்த உள்ளார் நயன்தாரா.

தென்னிந்திய மொழிகளில் மலையாள பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். திருமணத்துக்கு பின் 40 வயதுகளில் கூட கதாநாயகிகள் வேடங்கள் கிடைக்கின்றன. கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள். மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள்.

தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும் கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும். தமிழில் ஆறு படங்கள் கைவசம் வைத்து நம்பர்-1 நடிகையாக திகழும் நயன்தாரா அடுத்தடுத்து மலையாளத்தில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.

அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாள படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து மலையாள மார்க்கெட்டை பிடிக்க அவர் திட்டமிடுவதாக தெரிகிறது. விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். எனவேதான் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நீடிக்க மலையாள படங்கள் பக்கம் கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதும் இருவருமே அதை உறுதிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா!!
பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் தோற்றுப்போனதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2. நயன்தாராவுக்கு ஆலோசனை!
நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை சொல்கிறார்களாம்.
3. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
4. பிளஸ்-2 மாணவரை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு - நீதிபதி உத்தரவு
பிளஸ்-2 மாணவரை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
5. நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்
நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.