சினிமா செய்திகள்

ஓட்டுக்காக தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக கட்சிகள் - நடிகர் சிம்பு + "||" + Naivety Water gave Carnatic parties refuse - Actor Simbu

ஓட்டுக்காக தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக கட்சிகள் - நடிகர் சிம்பு

ஓட்டுக்காக தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக கட்சிகள் - நடிகர் சிம்பு
ஓட்டுக்காக தண்ணீர் தர கர்நாடக கட்சிகள் மறுக்கின்றன என நடிகர் சிம்பு கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்து கன்னடர்களை கவர்ந்தார். நடிகர்கள் நடத்திய மவுன போராட்டத்தையும் புறக்கணித்தார்.


தனது நிலைப்பாடுகள் குறித்து சிம்பு கூறியதாவது:-

“காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்கள் மீது குற்றம் சொல்லக்கூடாது. மக்கள் பெயரில் அங்குள்ள அரசியல்வாதிகள்தான் எதிர்க்கிறார்கள். தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கர்நாடக அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் வற்புறுத்துவதற்கு காரணம் ஓட்டு. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க சொல்லும் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது என்று பயப்படுகிறார்கள். அரசியலுக்குள் இருக்கும் அரசியல் வெளியேற்றப்பட வேண்டும்.

ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் இவ்வாறு சிம்பு கூறினார்.