சினிமா செய்திகள்

படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுவதே அதை அகற்றுவதற்கான ஒரே வழி நடிகை ரம்யா நம்பீசன் + "||" + Only way to get rid of casting couch is by talking about it: Ramya Nambeesan

படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுவதே அதை அகற்றுவதற்கான ஒரே வழி நடிகை ரம்யா நம்பீசன்

படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுவதே அதை  அகற்றுவதற்கான ஒரே வழி  நடிகை ரம்யா நம்பீசன்
சினிமா உலகில் படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுவதே அதை அகற்றுவதற்கான ஒரே வழி என நடிகை ரம்யா நம்பீசன் கூறினார். #CastingCouch #RamyaNambeesan
கோவை

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்துக்கொண்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக இது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அதிலும், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பற்றி பல்வேறு தகவல்களை கூறி அனைவரையும் மிகவும் பரபரப்பாகவே வைத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இது  குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது:

"பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரையுலகில் இல்லை என கூற முடியாது. என் தோழிகள் மூலம் இதனை நான் கேள்விப்பட்டிருகிறேன்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இது போன்ற பிரச்சினையை நான் சந்தித்தது இல்லை .
இது போன்ற செயல்கள் திரையுலகில் நடப்பதை பார்த்து தான் வெட்கப்படுவதாகவும், திரையுலகில் மட்டும் அல்ல, அனைத்து துறையிலும் இது போன்ற செயல்களால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை எதிர்த்து பெண்கள் குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் குறித்து பெண்கள் தைரியமாக வெளியே பேசினால் தான் குற்றம் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் .

 ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.   ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த காலத்தில் நான் தவறு செய்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில்,  மற்றவர்களைப் போலவே முக்கியமாக  ஸ்கிரிப்ட்டை தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

எனது அடுத்த படங்கள்   'சத்யா' மற்றும் 'நட்புனா என்னனு  தெரியுமா'   மேலும் படங்களில் கையொப்பமிட எந்த அவசரமும் இல்லை. நான் அமைதியாக சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என கூறினார்

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்
ஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
2. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.
3. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?
நேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது? என்ற விவரம் வெளியாகி உள்ளது.
4. பேட்ட - விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ரஜினிகாந்தின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
5. பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார். இறுதிச் சடங்குகள் கனடாவிலேயே நடைபெறும்.