சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் நடிகையை நாய் கடித்து குதறியது + "||" + The dog bites the actress in the shooting

படப்பிடிப்பில் நடிகையை நாய் கடித்து குதறியது

படப்பிடிப்பில் நடிகையை நாய் கடித்து குதறியது
படப்பிடிப்பில் நடிகையை நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல இந்தி நடிகை ரீனா அகர்வால். இவர் அஜிந்தா, தலாஷ், ஜாலாபாப்ஹடோ, பெஹன் ஹோகிடெரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷன் தொடர்களிலும் நடிக்கிறார். மும்பையில் நடந்த ‘கியா ஹால் மிஸ்டர் பஞ்சால்’ என்ற டி.வி தொடரின் படப்பிடிப்பில் ரீனா அகர்வால் பங்கேற்று நடித்து வந்தார்.


அப்போது ஒரு நாய் அவரை பயங்கரமாக கடித்து குதறியது. முகத்தில் பல இடங்களில் கடித்தது. இதனால் ரீனா அகர்வால் வலியால் அலறினார். படக்குழுவினர் நாயை விரட்டியடித்து அவரை மீட்டனர். நாய் கடித்த இடத்தில் இருந்து ரத்தம் கொட்டியதால் மயங்கினார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ரீனா அகர்வால் முகத்தில் டாக்டர்கள் தையல் போட்டனர். ஊசியும் போடப்பட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. காயம் ஆறுவதற்கு 30 நாட்கள் ஆகும் என்றும் அதுவரை ஓய்வு எடுக்கும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.