சினிமா செய்திகள்

பாலியல் புகார்: நடிகர் ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது நடிகை ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில் + "||" + Sexual complaint: Actor Rajasekhar there is evidence against srireddy replies to actress Jeevitha

பாலியல் புகார்: நடிகர் ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது நடிகை ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்

பாலியல் புகார்: நடிகர் ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது நடிகை ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
நடிகர் ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது என நடிகை ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில் அளித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் படங்களையும் அந்தரங்க உரையாடல்களையும் வெளியிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


இந்த சர்ச்சையில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம், டைரக்டர் சேகர் கம்முலு, எழுத்தாளரும் டைரக்டருமான கோனா வெங்கட், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, தயாரிப்பாளர்கள் வெங்கட அப்பாராவ் ஆகியோர் சிக்கி உள்ளதால் அடுத்து யார் பெயரை வெளியிடுவாரோ என்று பலரும் கதிகலங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ஜீவிதா தனது கணவருக்கு பெண்களை சப்ளை செய்ததாக சமூக ஆர்வலர் சந்தியா புதிய புகாரை வெளியிட்டு உள்ளார். இதனை ஜீவிதா மறுத்தார். தனக்கு எதிராக அவதூறு வெளியிட்டதற்காக வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்து உள்ளார். ஸ்ரீரெட்டியின் ஆபாச வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-

“திரையுலகில் சினிமா வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் அவலத்தை எதிர்த்து வருகிறேன். இந்த போராட்டத்தை நான் கைவிடப்போவது இல்லை. எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனது எதிர்ப்புகளை சீர்குலைக்கவும் முயற்சிகள் நடக்கிறது. நான் பயப்படமாட்டேன்.

எனது போராட்டத்தை நசுக்க நினைப்பவர்கள் முதலில் என்னை கொலை செய்து விட்டு உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுங்கள். நடிகர் ராஜசேகர் பற்றிய புகாரில் உண்மை இல்லை என்று ஜீவிதா கூறியிருக்கிறார். நடிகர் ராஜசேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. விரைவில் வெளியிடுவேன்” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.