உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் | அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம் | இன்று நடைபெற இருந்த மதுரை காமராஜர் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. | நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் - மின்துறை அதிகாரிகள் தகவல் | கடலூர் : கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | தஞ்சை: மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதம். |

சினிமா செய்திகள்

புது நடிகைகள் வரவால் சினிமாவில் போட்டி உள்ளது - காஜல் அகர்வால் + "||" + New actresses come in competition with cinema - Kajal Agarwal

புது நடிகைகள் வரவால் சினிமாவில் போட்டி உள்ளது - காஜல் அகர்வால்

புது நடிகைகள் வரவால் சினிமாவில் போட்டி உள்ளது - காஜல் அகர்வால்
புது நடிகைகள் வரவால் சினிமாவில் போட்டி அதிகமாகி உள்ளது என காஜல் அகர்வால் கூறினார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் அடுத்து இந்தி படமொன்றுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:-

“நடிகைகள் சினிமாவில் அறிமுகமாவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் மார்க்கெட்டை தக்கவைப்பதுதான் சவாலாக இருக்கிறது. எனக்கு தென்னிந்திய மொழிகளில் நல்ல கதைகள் அமைந்தன. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தார்கள். அவர்கள் என்னை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்போலவே கருதி ஆதரவு தந்தார்கள். இது பெரிய மகிழ்ச்சி அளித்தது.


திரையுலகில் புதிது புதிதாக நிறைய நடிகைகள் வருகிறார்கள். இதனால் சினிமா போட்டி நிறைந்த உலகமாக மாறி இருக்கிறது. இந்த போட்டிகளுக்கு நடுவில் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். திறமையற்றவர்கள் ஒதுக்கப்பட்டு விடுவார்கள். எத்தனை நடிகைகள் வந்தாலும் எனக்கான இடத்தில் நான்தான் இருப்பேன். எனது பெயரை தக்க வைக்க தினமும் திறமையை மெருகேற்றி வருகிறேன்.

வித்தியாசமாக நடிக்க அக்கறை எடுக்கிறேன். இயக்குனர்கள் கதை சொல்லும்போது எனது மனதுக்கு பிடித்து இருந்தால்தான் நடிக்க சம்மதிப்பேன். கதை முக்கியமாக இருக்க வேண்டும். அதைவிட எனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமா? என்பதில் கவனமாக இருந்து கதைகளை தேர்வு செய்கிறேன்.

10 வருடங்களாக எனது தேகமும் சருமமும் அப்படியே அழகாக இருக்கிறதே என்று பலரும் கேட்கிறார்கள். இயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறேன். மனசு அழகாக இருந்தால் தேகத்தில் பொலிவு வரும்.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. முத்தமிட்டு ஒளிப்பதிவாளர் அநாகரிகம் : காஜல் அகர்வால் ரசிகர்கள் எதிர்ப்பு
தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
2. தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 474 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 474 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
3. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை
மேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.
4. உலக அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற சீர்காழி மாணவி தங்கம் வென்று சாதனை
உலக அளவிலான யோகா போட்டியில் சீர்காழி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
5. திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட தடகள போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.