சினிமா செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - நடிகர் பவன்கல்யாண் புகார் + "||" + Sexual allegation By Srireddy Rs 10 crore deal to take revenge on me - Actor Pawan Kalyan's complaint

பாலியல் குற்றச்சாட்டு ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - நடிகர் பவன்கல்யாண் புகார்

பாலியல் குற்றச்சாட்டு ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - நடிகர் பவன்கல்யாண் புகார்
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் என நடிகர் பவன்கல்யாண் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இவரை ‘பவர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். ஜன சேனை என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலிலும் குதித்துள்ளார். பாலியல் தொல்லையால் தெலுங்கு பட உலகை கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சையில் இவரும் சிக்கி உள்ளார். “பவன் கல்யாணை அண்ணனாக கருதிய என்னை செருப்பால் அடித்துக்கொள்கிறேன்” என்று ஆவேசப்பட்டு தன்னை செருப்பாலும் அடித்துக்கொண்டார் ஸ்ரீரெட்டி.


“பவன் கல்யாண் இளம்பெண்களை வைத்து மசாஜ் செய்து கொள்கிறார். அந்த பணிக்கு பெங்காலி பெண்களையே தேர்வு செய்கிறார் என்று குற்றம்சாட்டியும் கேவலமாக பேசினார். இது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டனர். அவருக்கு மிரட்டல்களும் வந்தன.

இதனால் ஸ்ரீரெட்டி பயந்துபோய் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு தனக்கு ரூ.5 கோடி தருவதாக பின்னால் இருந்து ஒருவர் தூண்டியதால் பவன் கல்யாணை தவறாக பேசினேன் என்றார். பவன் கல்யாணுக்கு எதிராக ஸ்ரீரெட்டியை தூண்டி விட்டது நான்தான் என்று பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா கூறினார்.

இதைத்தொடர்ந்து பவன் கல்யாண் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“ஸ்ரீரெட்டி மூலம் அரசியல் ரீதியாக என்னை களங்கப்படுத்த முயற்சி நடந்து இருப்பது நிரூபணமாகி உள்ளது. இதற்காக ரூ.10 கோடி பேரம் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதில் ரூ.5 கோடியை ஸ்ரீரெட்டிக்கு தருவதாக கூறியுள்ளனர். இதன் பின்னணியில் டைரக்டர் ராம்கோபால் வர்மா மட்டுமின்றி சந்திரபாபுவின் மகனும் அமைச்சருமான லோகேசும் இருக்கிறார். சந்திரபாபு நாயுடு மேற்பார்வையில்தான் என்னை பழிவாங்க முயற்சிகள் நடந்துள்ளன.” இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.