சினிமா செய்திகள்

கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? இந்தி பட உலகில் பரபரப்பு + "||" + Will Aishwarya break up with her husband? In the Hindi film world Furore

கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? இந்தி பட உலகில் பரபரப்பு

கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? இந்தி பட உலகில் பரபரப்பு
கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? என இந்தி பட உலகில் பரபரப்பு நிலவுகிறது.
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யாராய். இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

அமிதாப்பச்சன் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். ரூ.6 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்று தகவல்கள் பரவி வருகின்றன. மற்ற கதாநாயகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் தாயும் பழம்பெரும் நடிகையுமான ஜெயாபச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் அடிக்கடி தகராறுகள் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

மாமியாருடன் சண்டையால் ஐஸ்வர்யாராய் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று அதிக நாட்கள் அங்கு தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை இருவருமே மறுக்கவில்லை. ஜெயாபச்சனின் 70-வது பிறந்த நாளை குடும்பத்தினர் விருந்து வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கிசுகிசுத்தனர். அபிஷேக் பச்சன் சகோதரி ஸ்வேதா நந்தாவுடனும் மோதல் இருப்பதாக கூறினர்.

இந்த நிலையில் கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகித்து அவரது செல்போனை எடுத்து போன் நம்பர்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை ஐஸ்வர்யாராய் ஆய்வு செய்ததாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் கணவரை நான் சந்தேகப்படுவது இல்லை அவரது செல்போனை எடுத்து பார்ப்பதும் இல்லை என்று ஐஸ்வர்யாராய் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில்தான் இருவரும் ஒரே வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக வீடியோ தகவல் வெளிவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தை அபகரிக்க முயன்று தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அ.ம.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு போலீசாருடன், செந்தில்பாலாஜி வாக்குவாதம்- பரபரப்பு
கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு அளித்திருப்பதை சுட்டிக்காட்டி, க.பரமத்தியில் அ.ம.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. அந்தியூர் அருகே பரபரப்பு: 2 குழந்தைகளை வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி
அந்தியூர் அருகே தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
4. எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை கண்டித்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
5. பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கல்லூரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.