சினிமா செய்திகள்

டைரக்டருடன் தமன்னா மோதலா? + "||" + Tamanna's conflict with the director?

டைரக்டருடன் தமன்னா மோதலா?

டைரக்டருடன் தமன்னா மோதலா?
டைரக்டருடன் தமன்னா மோதல் என தகவல் வெளியாகி உள்ளது.
தமன்னா 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தை ரேவதி இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் தமிழ், கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்தும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நீலகண்டாவும் இயக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.


தமிழில் காஜல் அகர்வாலும் தெலுங்கில் தமன்னாவும் மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் கன்னடத்தில் பாருல் யாதவும் கங்கனா ரணாவத் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். படப்பிடிப்பை விரைவில் தொடங்குவதாக இருந்தனர். இந்த நிலையில் தெலுங்கில் இந்த படத்தின் கதையில் இயக்குனர் நீல கண்டா சிறிய மாற்றம் செய்தார்.

இதற்கு தமன்னா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் டைரக்டருக்கும் தமன்னாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அந்த படத்தை இயக்க முடியாது என்று சொல்லி நீல கண்டா வெளியேறி விட்டார் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவியது. தெலுங்கிலும் ரமேஷ் அரவிந்தை வைத்தே படத்தை இயக்க படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமன்னாவும் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் பரவியது.

இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். தமன்னா படத்தில் இருந்து விலகவில்லை என்றும் தமிழ், கன்னட படங்கள் முடிந்த பிறகு தெலுங்கு படம் தயாராகும் என்றும் அவர்கள் கூறினர்.