சினிமா செய்திகள்

சினிமா வாய்ப்புக்காக பாலியல் சம்பவங்கள்; நடிகை ராசிகண்ணா எதிர்ப்பு + "||" + Sexual Events for Cinema Opportunity; Actress Rasikanna Anti

சினிமா வாய்ப்புக்காக பாலியல் சம்பவங்கள்; நடிகை ராசிகண்ணா எதிர்ப்பு

சினிமா வாய்ப்புக்காக பாலியல் சம்பவங்கள்;  நடிகை ராசிகண்ணா எதிர்ப்பு
சினிமா வாய்ப்புக்காக பாலியல் சம்பவங்கள் நடப்பதை நடிகை ராசிகண்ணா எதிர்ப்பதாக கூறினார்.

நயன்தாராவுடன் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடிப்பவர் ராசிகண்ணா. சித்தார்த் ஜோடியாக ‘சைத்தான் கா பச்சா’ படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


ராசிகண்ணாவும் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எனக்கு அதுமாதிரி சம்பவங்கள் இது வரை நடக்கவில்லை. என்னை யாரேனும் அழைத்தால் சும்மா விட மாட்டேன். அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பேன். போராடவும் தயங்க மாட்டேன்.

எனக்கு யார்மீதும் பயம் கிடையாது. சமீபத்தில் ஜார்ஜியா சென்ற போது மலைப்பாம்பையே கையில் பிடித்து பக்கத்தில் நின்றவர்களை அதிர வைத்தேன். இந்த தைரியம் எனது பாட்டியிடம் இருந்து வந்தது. அவருக்கும் பயம் கிடையாது” என்றார்.

மேலும் ராசிகண்ணா கூறியதாவது:-

“காதல் என்பது இனிமையான அனுபவம். 17 வயதில் எனக்கு காதல் வந்து முடிந்து விட்டது. இப்போது சினிமாவில்தான் முழு கவனமும் இருக்கிறது. நான் காதலித்தால் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன். காதல் திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது. சினிமா நடிகையாவேன் என்று நினைக்கவில்லை. படித்து முடித்ததும் மாடலிங் செய்தேன். அதை பார்த்து இந்தி படங்களில் வாய்ப்பு வந்தது. அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடித்தேன். தமிழிலும் 3 படங்களில் நடித்து வருகிறேன்.” இவ்வாறு ராசிகண்ணா கூறினார்.