சினிமா செய்திகள்

கார்த்தி பட வில்லன் 26 வயது பெண்ணை மணந்தார் + "||" + Karthi movie villain married 26 year old girl

கார்த்தி பட வில்லன் 26 வயது பெண்ணை மணந்தார்

கார்த்தி பட வில்லன் 26 வயது பெண்ணை மணந்தார்
கார்த்தி படங்களில் வில்லனாக நடித்த 52 வயது மிலிந்த் சோமன், 26 வயது பெண்ணை மணந்தார்

கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன், பையா படங்களில் வில்லனாக வந்தவர் மிலிந்த் சோமன், சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம், பார்த்திபனின் வித்தகன் படங்களிலும் நடித்துள்ளார். இந்தி பட உலகிலும் முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். இவருக்கு 52 வயது ஆகிறது.


மிலிந்த் சோமனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் மிலிந்த் சோமனும் அசாமை சேர்ந்த அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணும் 4 வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள இரவு விடுதியில் சந்தித்து நட்பாக பழகினார்கள். பிறகு அது காதலாக மலர்ந்தது.

இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். மகள் வயது பெண்ணை மணக்கலாமா? என்று விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்த மிலிந்த் சோமன், ‘மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணமா? என்று கேட்கிறார்கள். மற்றவர்கள் பேசுவது பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்களுக்கு எங்கள் காதல் பற்றி எதுவும் தெரியாது” என்றார்.

இந்த நிலையில் மிலிந்த் சோமனுக்கும் அங்கிதா கொன்வருக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கியது
கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசாரிடம் சிக்கினர்.
2. சபரிமலை போல் மற்றொரு விவகாரம்; ஆண்கள் மட்டும் வணங்கும் கடவுளை வழிபட சென்ற பெண்
கேரளாவில் ஆண்கள் மட்டும் செல்ல கூடிய மலை பகுதிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியை அடுத்து கடவுளை வழிபட பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
3. ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
ஈரோட்டில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: பொக்லைன் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை - தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பொக்லைன் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
5. மடத்துக்குளம் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளி கைது
மடத்துக்குளம் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.