சினிமா செய்திகள்

எடை கூடியதால் வருத்தம் இல்லை - நடிகை இலியானா + "||" + No regret for weight loss - actress Ileana

எடை கூடியதால் வருத்தம் இல்லை - நடிகை இலியானா

எடை கூடியதால் வருத்தம் இல்லை - நடிகை இலியானா
எடை கூடியதால் வருத்தம் இல்லை என நடிகை இலியானா கூறினார்.

‘நண்பன்’ படத்தில் கதாநாயகியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலியானா. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கிறார். சமீபத்தில் குளியல் தொட்டியில் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படத்தையும் பதிவேற்றி இருந்தார்.


இலியானாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்றும் மார்க்கெட் பிடிக்கவே கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் இந்தி பட உலகில் பேசப்பட்டது. இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிபோனும் காதலிக்கிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதனை அவர்கள் உறுதிபடுத்தவில்லை. இந்த நிலையில் இலியானா கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. திருமணமாகாமலே இலியானா தாயாகப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டனர்.

கர்ப்பமானதால் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்து இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. அத்துடன் அவர் உடல் எடை கூடிய புகைப்படமும் இணையதளங்களில் வெளியானது. இதற்கு இலியானா பதில் அளித்துள்ளார். “நான் கர்ப்பமாக இல்லை. எடை கூடியிருப்பதாக பேசுகிறார்கள். குண்டாக இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது” என்று அவர் கூறினார்.