சினிமா செய்திகள்

அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்குகிறது + "||" + Ajith Kumar's 'Vishwamam' shooting begins

அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்குகிறது

அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்குகிறது
நிறுத்தி வைக்கப்பட்ட அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.

அஜித்குமார் நடித்த ‘விவேகம்’ படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியானது. இந்த படத்தை ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் படங்களை எடுத்த சிவா டைரக்டு செய்து இருந்தார். மீண்டும் அவரது இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.


இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை தேர்வு செய்தனர். இதன் படப்பிடிப்பு சென்ற மாதம் தொடங்குவதாக இருந்தது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் பல கோடி ரூபாய் செலவில் அரங்குகள் அமைத்து இருந்தனர். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் சினிமா படப்பிடிப்புகளை ரத்து செய்ததால் திட்டமிட்டபடி விஸ்வாசம் பட வேலைகளை தொடங்க முடியாமல் நிறுத்தி வைத்தனர்.

தற்போது வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து விஸ்வாசம் படப்பிடிப்பை அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்க திட்டமிட்டு உள்ளனர். விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அஜித்குமாரின் வழக்கமான காதல் அதிரடி படங்கள் மாதிரி இல்லாமல் திகில் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.