சினிமா செய்திகள்

நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த படப்பிடிப்பில் குண்டு வெடித்து தீவிபத்து + "||" + Massive fire burns down the sets of Akshay Kumar’s Kesari; the actor is unhurt

நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த படப்பிடிப்பில் குண்டு வெடித்து தீவிபத்து

நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த படப்பிடிப்பில்  குண்டு  வெடித்து  தீவிபத்து
நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வரும் படப்பிடிப்பில் குண்டு வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் கேசரி என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்தது.படத்தின் கதாநாயகன் அக்சய் குமார் உட்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் சண்டை  காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகியது.வேகமாகப் பரவிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்த விபத்தில் படக்குழுவினர் காயமின்றி தப்பியதாக தெரியவந்துள்ளது.

நடிகர் அக்‌ஷய் குமார் ரஜினிகாந்தின் 2.0 வில் வில்லனாக நடித்து உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.