சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது-மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் + "||" + Rajinikanth's party does not have family politics Secretary of State Raju Mahalingam

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது-மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம்

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது-மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம்
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது என ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறி உள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து, ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. இதற்கான நிர்வாகிகள் மாவட்டம், நகரம், வட்டம் அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை, புதுச்சேரிக்கு மட்டுமே நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வேண்டியுள்ளது. என்றாலும் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர், மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அதன் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? தொடங்க இருக்கும் புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேணடும்? என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சுதாகர், ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

அவர்களிடம் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தனர். அடுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார்கள். ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்குள் மாவட்ட அளவில் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.

கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் பேசியதாவது:-

அரசியலுக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும். நமது தலைவர் ரஜினி அப்படிப்பட்ட தலைவராக இருப்பார். அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும்.

ரஜினியின் கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி. இதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அவருடைய கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது. அரசியல் என்றால் விமர்சனம் இருக்கதான் செய்யும் அதை ஆக்க பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நேற்று கூட ரஜினிகாந்த் கூறினார், உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும் அந்த தலைவராக ரஜினிகாந்த் இருப்பார் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ ‘மேக்கிங் வீடியோ’ இணையதளத்தில் வெளியானது
ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் 29-ந்தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் கதாநாயகி, எமிஜாக்சன்.
2. அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் -அமைச்சர் ஜெயக்குமார்
அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. ‘என் ஒப்புதலுடன் தான் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’ ரஜினிகாந்த் திடீர் விளக்கம்
ரஜினி மக்கள் மன்றத்தில் என் ஒப்புதலுடன் தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
4. வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது - ரஜினிகாந்த்
வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
5. கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, குருசோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் என்று நிறைய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறார்கள்.